Thursday, June 4, 2009

உணவு ச‌ெ‌ரிமான‌ம்

செரிக்கும் பாதையானது நீண்ட குழாய் போன்றது. வாயிலிருந்து துவங்கி, கழுத்து வழியாக உடம்பின் இடுப்புப் பகுதி வரை இறங்குகிறது. இந்தப் பாதையை நீட்டி அளந்தால் சுமார் 30 அடி நீளம் இருக்கும். இதனை உணவுப் பாதை என்கிறோம். இதில் வாய், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை ஜீரண உறுப்புகள் எனப்படும்.

உணவு உ‌ண்டது‌ம், உணவு செ‌ரிமானப் ப‌ணி துவ‌ங்கு‌‌கிறது. உணவுகளை செரிக்கும் போது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் சுரக்கின்றன. இவை மிகவும் சக்தி வாய்ந்த அமிலங்களாகும். சா‌ப்‌பிடுவத‌ற்கு மு‌ன்பு‌ம், சா‌ப்பா‌ட்டு‌க்கு நடுவேயு‌ம் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பதா‌ல் இ‌ந்த அ‌மில‌ங்க‌ள் சுர‌ப்ப‌தி‌ல் தாமத‌ம் ஏ‌ற்படு‌ம். அதனா‌ல்தா‌ன் சா‌ப்‌பிடுவத‌ற்கு மு‌ன்பு த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் அ‌றிவுறு‌த்துவா‌ர்க‌ள்.

பொதுவாக இரைப் பையைச் சூழ்ந்துள்ள சளிச்சவ்வு, இந்த சக்தி வாய்ந்த அமிலங்கள் இரைப்பைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் பாதுகாக்கின்றன.

ஆனால் மசாலா அல்லது அதிகமான கார உணவு, புகையிலையை உண்ணும்போது இந்த அமிலங்கள் அதிகமாக சுரந்து, இரைப்பை சுவர்கள் மற்றும் திசுக்களை புண்ணாக்குகின்றன. ‌இதைத் தான் அல்சர் என்று அழைக்கிறோம்.

உள்ளே செல்லும் உணவுக்கூழை சிறுகுடலைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன.

No comments:

Post a Comment