Friday, August 7, 2009

ப‌ற்க‌ளி‌ன் செய‌ல்

நம்முடைய உடம்பில் மிகவும் வலுவான விஷயம் என்னவென்றால், அது பல்லின் மீது இருக்கும் எனாமல்தான். இது யானையின் தந்தத்தை விட வலுவானது எ‌ன்று ‌விய‌‌க்‌கிறது மருத்துவம்.பெரும்பாலானோர் பற்களை பராமரிப்பதற்கு அதிக முக்கித்துவம் கொடுப்பதில்லை. பல் தானே என்று அலட்சியமாக இருந்துவிடுவது உண்டு. இதனால், காலப்போக்கில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

பலரது பற்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இது புளுரோஸிஸ் என்னும் நோயின் அறிகுறி.

இதை ஆரம்பித்திலேயே கவனித்து குணப்படுத்திவிட வேண்டும். தவறினால் இந்த கறைகள் பற்களில் நிரந்தரமாக தங்கிவிடும். பின்னர் இது தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் வழி வகுத்துவிடும்.

அதோடு, புளோரைடு கலந்த பற்பசைகளையும் தவிர்த்துவிட வேண்டும். குடிநீரில் புளோரைடு அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.

இந்த நோய் தாக்கியவர்கள் அலுமினியம், பொட்டாசியம் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து 10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். 3 மணி நேரம் கழித்து மெல்லிய துணியில் வடிகட்டி, பின்னர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால், பற்கள் மஞ்சள் நிறத்திலிருந்து மாறி, பளீரிட ஆரம்பிக்கும்.