Tuesday, June 9, 2009

பழகு தமிழ் - 1

1) பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

2) சரக்கு ரயிலை குறுக்கு வழியில் பிடிக்க நினைத்த கிறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.

3) யார் தச்ச சட்ட, என் தாத்தா தச்ச சட்ட.

4) கொக்கு நெட்ட கொக்கு,
நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

5) ஓடற நரியில ஒரு நரி கிழ நரி,
கிழநரி முதுகுல ஒரு பிடி நர முடி.

6) பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

7) வாழை பழம் வழுக்கி கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்?

8) கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால்,
குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.

9) கிழட்டு கிழவன் வியாழகிழமை வாழை பழத்தில் வழுக்கி விழுந்தான்.

10) கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது.

11) காக்கா காகான்னு கத்துறதால காகான்னு பேரு வந்ததா?
இல்ல காகான்னு பேரு வந்ததால காக்கா காகான்னு கத்துதா?

No comments:

Post a Comment