Friday, August 7, 2009

ப‌ற்க‌ளி‌ன் செய‌ல்

நம்முடைய உடம்பில் மிகவும் வலுவான விஷயம் என்னவென்றால், அது பல்லின் மீது இருக்கும் எனாமல்தான். இது யானையின் தந்தத்தை விட வலுவானது எ‌ன்று ‌விய‌‌க்‌கிறது மருத்துவம்.பெரும்பாலானோர் பற்களை பராமரிப்பதற்கு அதிக முக்கித்துவம் கொடுப்பதில்லை. பல் தானே என்று அலட்சியமாக இருந்துவிடுவது உண்டு. இதனால், காலப்போக்கில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

பலரது பற்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இது புளுரோஸிஸ் என்னும் நோயின் அறிகுறி.

இதை ஆரம்பித்திலேயே கவனித்து குணப்படுத்திவிட வேண்டும். தவறினால் இந்த கறைகள் பற்களில் நிரந்தரமாக தங்கிவிடும். பின்னர் இது தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் வழி வகுத்துவிடும்.

அதோடு, புளோரைடு கலந்த பற்பசைகளையும் தவிர்த்துவிட வேண்டும். குடிநீரில் புளோரைடு அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.

இந்த நோய் தாக்கியவர்கள் அலுமினியம், பொட்டாசியம் மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து 10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். 3 மணி நேரம் கழித்து மெல்லிய துணியில் வடிகட்டி, பின்னர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால், பற்கள் மஞ்சள் நிறத்திலிருந்து மாறி, பளீரிட ஆரம்பிக்கும்.

Friday, June 12, 2009

க‌ண்‌ணி‌ன் இமைக‌ள்

நாம் கண்ணிமைக்கும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டதாக கணக்கிடுகிறார்களா‌ம் ஆ‌ய்வாள‌ர்க‌ள்.


மேலு‌ம், ந‌ம் க‌ண்களு‌க்கு ஈர‌ப்பசையை அ‌ளி‌ப்பதே இ‌ந்த இமைக‌ள்தா‌ன். அதனா‌ல் தா‌ன் தொலைக்காட்சி ம‌ற்று‌ம் க‌ணி‌னியை‌ப் பா‌ர்‌க்கு‌ம் போது நமது இமைக‌ள் இமை‌ப்பது குறை‌ந்து ‌விடு‌கிறது. இதனா‌ல் க‌ண்களு‌க்கு‌த் தேவையான ஈர‌ப்பசை குறை‌ந்து பா‌ர்வை‌க்கு கோளாறு ஏ‌ற்படு‌கிறது. ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு குறை‌ந்தது 20 முறையாவது இமைக‌ள் இமை‌க்க வே‌ண்டுமா‌ம்.


க‌ண்ணு‌க்கு மேலாக மறைவாக லாக்ரிமல் கிளாண்ட் என்று ஒரு சுரப்பி உ‌ள்ளது. இந்த சுரப்பி சுரக்கும் லாக்ரிமா என்ற திரவம்தான் கண்ணீர்.


பொதுவாக விழிக்கோளத்தில் தூசு படும்போது அதை அலம்பி விடுவதுதான் இந்த சுரப்பியின் வேலை. இது தொடர்ந்து இயங்கும்போது நம் கண்ணில் கண்ணீர் வடிகிறது.

Tuesday, June 9, 2009

பழகு தமிழ் - 1

1) பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.

2) சரக்கு ரயிலை குறுக்கு வழியில் பிடிக்க நினைத்த கிறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.

3) யார் தச்ச சட்ட, என் தாத்தா தச்ச சட்ட.

4) கொக்கு நெட்ட கொக்கு,
நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

5) ஓடற நரியில ஒரு நரி கிழ நரி,
கிழநரி முதுகுல ஒரு பிடி நர முடி.

6) பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

7) வாழை பழம் வழுக்கி கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்?

8) கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால்,
குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.

9) கிழட்டு கிழவன் வியாழகிழமை வாழை பழத்தில் வழுக்கி விழுந்தான்.

10) கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது.

11) காக்கா காகான்னு கத்துறதால காகான்னு பேரு வந்ததா?
இல்ல காகான்னு பேரு வந்ததால காக்கா காகான்னு கத்துதா?

Sunday, June 7, 2009

கண் - இமை

கண்ணீரை துடைக்கும் கரங்கள் உறவுகள் என்றால்!
கண்ணீரே வராமல் காக்கும் இமைகள் தான் நண்பர்கள்!!!!

மௌனம் - மொழி

இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்!
உண்மையானவரை பிரியும் போது மௌனம் துன்பம்!
காதலில் மௌனம் சித்ரவதை!
தோல்வியில் மௌனம் சாதனை படி!
வெற்றியில் மௌனம் அடக்கம்!
இறுதியில் மௌனம் மரணம்!

அர்த்தம்

அன்பை சொல்ல ஆயிரம் வார்த்தைகள் உண்டு...

ஆனால் ஒரு சின்ன சிரிப்பு சொல்லும் அர்த்தம் எந்த வார்த்தையிலும் கிடையாது...

சுவாசம்

உலகமே உயிர் இல்லாத காற்றை தான் சுவாசிக்கிறது....
ஆனால் நான் உயிர் உள்ள உன் அன்பை சுவாசிக்கிறேன்!!!!!!!