Tuesday, May 12, 2009

ஒரு இடத்திற்கு கிளம்பும்போது பூனை குருகிட்டால் சிறிது நேரம் உட்கார வேண்டும் - ஏன்?

அன்றைய சூழல்:-

சாலைகள் இல்லாத காலம். காட்டு வழியே நடந்து செல்ல வேண்டிய காலம். காடு, மிருகங்கள் வாழும் இடம் என நமக்கு தெரியும். சிங்கம் மற்றும் பூனை(Cat Family) வகையை சேர்ந்த புலி இவைகளுக்கு பசி எடுத்தால் என்ன செய்யும் என்று நமக்கு நன்கு தெரியும்.
இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, மிருகங்கள் நம்மை அடித்து சாப்பிட கூடும்.
இரண்டு, நாம் மிருகங்களை கொன்றுவிட நேரும்.
விளைவு:-
உயிர் சேதம் மட்டுமே! போய் சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது.
முடிவு:-
ஒரு இடத்திற்கு கிளம்பும்போது பூனை (Cat Family) குருகிட்டால், சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அந்த பூனை சென்ற பின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இன்றைய சூழல்:-
நம்மை சுற்றி எப்போதும் போக்குவரத்து நெரிசல் தான். நாமாக விரும்பி காட்டுக்குள் சென்று பூனை வகையான புலியை கட்டி உருண்டால் தான் உயிர் இழப்பு.
என்ன செய்யலாம்?
வீட்டு பூனையை கண்டு, அதை குறை கூறி வீட்டில் ஓய்வு எடுக்கலாமா? இல்லை நம் வேலையை பார்க்கலாமா?

No comments:

Post a Comment