Tuesday, May 12, 2009

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க கூடாது - ஏன்?

அன்றைய சூழல்:-
மின்சாரம் கண்டுபிடிக்காத அக்காலத்தில், அகல் விலக்குகள் தான் வீடுதோறும் இருக்கும். மேலும் வீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடி என இயற்க்கை சூழ்ந்து இருக்கும்.

இரண்டு விஷயங்கள் நடக்க கூடும்:-
ஒன்று, சூரியன் மறைந்த பின்னர் பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் இதமான வெப்பதிற்காக வீட்டினுள் தஞ்சம் அடையும்.
இரண்டு, நாம் கை தவறி ஏதேனும் விலை மதிப்பற்ற பொருளை கீழே போட்டுவிட கூடும்.

விளைவு:-
ஒன்று, நம்மை அறியாமல் தஞ்சம் புகுந்த பூச்சிகளை தொந்தரவு செய்து அதன் கோபத்திற்கு ஆளாக கூடும்.
இரண்டு, விலை மதிப்பற்ற பொருளை குப்பையில் போட்டுவிட கூடும்.

எது எப்படியோ பின் விளைவுகள் நமக்குத்தானே.

முடிவு:-
சூரியன் மறைந்த பின் வீடு பெருக்க வேண்டாம்.

இன்றைய சூழல்:-
நம்மை சுற்றி எப்போதும் வெளிச்சம் தான். நாமாக பார்த்து விளக்கை அணைத்தால் தான் இருட்டு. மேலும் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டை சுற்றி அடுக்கு மாடி கட்டிடங்களும், நெடும் சாலைகளும் மட்டுமே உள்ளதால் இயற்க்கைக்கு வழியே இல்லை.

என்ன செய்யலாம்?

சூரியன் மறைந்த பின் வீடு பெருக்கலாமா வேண்டாமா?

மற்ற செயல்கள் - இதே காரணம்
அ) இரவில் நகம் வெட்டுவது
ஆ) தலை வாறுவது

No comments:

Post a Comment