Friday, May 29, 2009

வீட்டின் முன் கோலம் - ஏன்?

ஆதி காலத்தில் மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தான். பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்கு தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

வீடு கட்டி முடித்த பின்னர், அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான். கோலத்தில் இருக்கும் அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது.

ஆனால் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன. இதனோடு கோல போட்டிகள் வேறு உருவானது.

அழகுக்கு முக்கியத்துவமா இல்லை உயிர்களுக்கா? செய்யும் செயலை ஏன், எதற்காக என்று தெரிந்து செய்தால் நன்மை பயக்கும். இல்லையேல் கேலிக்கும் கூத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இவை நமக்கு நன்மை பயக்குமா? சிந்திப்போம்! செயல்படுவோம்!

No comments:

Post a Comment