Wednesday, May 27, 2009

தாலி, மெட்டி - ஏன்?

அக்காலத்தில் தான் திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்று மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தனர். இப்போது அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அடையாள அட்டை போன்று ஒன்று வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி தாலியும், மெட்டியும் உருவானது.

தலை நிமிர்ந்து நடப்பன் ஆடவன் என்பதால் தன் எதிரே வரும் பெண் திருமணம் ஆனவள் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக, பெண் தாலி அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தலை குனிந்து நிலம் பார்த்து நடப்பவள் பெண் என்பதால் தன் எதிரே வரும் திருமணம் ஆனவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஆண் மெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அதனை நடை முறைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நாம் இந்த காரணத்தை புரிந்து கொண்டு தாலி, மெட்டியை அணிந்து கொள்கிறோமா?

ஆஹா, பண்டைய காலத்தில் அடையாள அட்டையை கண்டுபிடித்தது எம் மக்களே!

No comments:

Post a Comment