Thursday, May 21, 2009

உரிமை குரல்

இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் சென்றிருந்தேன். வீட்டில் இருந்து கத்திப்பாரை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்க்கு சென்றிருந்தால், கோயம்பேட்டில் இருந்து வரும் வேலூர் பேருந்து ஒன்றில் ஏறி வேலூர் சென்றிருக்கலாம். ஆனால் பதினைந்து பேர் செல்வதால் கோயம்பேடு சென்றால் அனைவரும் உட்கார்ந்து செல்லலாம் என்று எண்ணி கோயம்பேடு சென்றோம். பனிரண்டு பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள். நாங்கள் நினைத்தது போல் வேலூர் பேருந்து காலியாக நின்று கொண்டிருந்தது. அனைவரும் ஏறி அமர்ந்தோம்.

பேருந்தின் இடது புறம் இரண்டு இருக்கை வரிசையும், வலது பக்கத்தில் மூன்று இருக்கை வரிசையும் இருந்தது. பேருந்தில் ஆங்காங்கே சிறுவர்களுக்கு (மூன்று வயதிற்கு மேற்பட்டவர்கள்) அரை பயனச்சீட்டு வாங்க வேண்டும் என்று எழுதி இருந்தது. இது பேருந்தில் பயணிபவர்களுக்கான விதிமுறை. அவ்வாறு அரை பயணச்சீட்டு வாங்கப்படும் குழந்தைகளுக்கு, இருக்கை இருந்தால் உட்கார்வதற்கு முழு இருக்கை தர வேண்டும் என்பதும் பேருந்தில் பயணிபவர்களுக்கான விதிமுறையே.

இவ்வாறு இருக்க, பேருந்து நடத்துனர் அடுத்த அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஆட்களை ஏற்றும் போது பேருந்தில் இடம் இருப்பதாக கூறி, ஆட்களை ஏற்றி, என்னிடம் வந்து தள்ளி உட்கருமாறு கூறினார். நானும் இடம் கொடுக்க அருகில் அமர்ந்தவாறோ என்னை மேலும் மேலும் தள்ள குழந்தைகள் திணற ஆரம்பித்தனர். அருகில் அமர்ந்தவரிடம், திரும்பி உட்கருமாறு கூறினென். அப்படி உட்கார்ந்தால் அவரது கால் நடை பாதையில் இருக்கும். அவர் மறுத்து, குழந்தைகள் தானே என்று அதிகரமாக கூறினார். உடனே, பேருந்து நடத்துநரை அழைத்தேன்.

நடத்துனர் அருகில் வந்தார். இரண்டு அரை பயனச் சீட்டுக்கு ஒரு இருக்கை தான் தர முடியும் என்றும் நான் அருகில் அமர்ந்து இருப்பவருடன் ஒத்துபோக வேண்டும் என்றார். இரண்டு அரை பயணச்சீட்டு என்பது கணக்கு படி ஒரு பயனசீட்டின் விலை தான். ஆனால் பேருந்தின் விதி முறைப்படி இரண்டு இருக்கைகளுக்கு சமம். நான் மற்றவருடன் ஒத்துபோக மாட்டேன் என்று கூறவில்லை. ஒத்துபோக வேண்டும் என்பதற்காக நான் கஷ்டப்பட விரும்பவில்லை. மேலும் ஒத்துபோவது என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். என் அருகில் அமர்பவர் ஒத்துபோகாத போது என்னால் மட்டும் எப்படி சாத்தியம்? அதுவும் மூன்று மணி நேரம் இரண்டு குழந்தைகளுடன். பேருந்து நடத்துனர் தனது கட்டுபாட்டில் உள்ள பேருந்தில் அதிக வருமானம் காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கஷ்டபடுத்துவதில் என்ன நியாயம்?

எனவே என் குடும்பத்தினர் அனைவரும் எப்படி அது சாத்தியம் என்று வினவ, பேருந்தில் ஒரே கூச்சல். நான் பேருந்தின் விதி முறைப்படி இரண்டு இருக்கை தான் தர வேண்டும் என்றும் என்னால் கஷ்டப்பட முடியாது என்றும் நான் கோயம்பேட்டில் இருந்து இருக்கைகாக சுற்றி வந்திருக்கிறேன் என்றும் கூறினேன். உடனே நடத்துனர் அமைதியனார். ஆனால் என் அருகில் அமர்ந்திருந்தவருடன் வந்திருந்தவர்கள் தாங்கள் பொது மக்கள் என்று கூற, என் குடும்பத்தினர் சிரித்துவிட்டனர். பேருந்து நடத்துனாரோ அந்த நபரை அழைத்து தனது இருக்கையில் அமர செய்தார். நான் என் குழந்தைகளுடன் நிம்மதியாக வேலூர் வந்து சேர்ந்தேன்.

பொது மக்களுக்கு ஏன் பொது அறிவு இல்லாமல் போனது? தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தின் விதி முறைகள் ஏன் தெரியாமல் போயிற்று? அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறது என்று பொது மக்களுக்கு ஏன் தெரியவில்லை? இந்த விழிப்புனர்வை எவ்வாறு பொது மக்களுக்கு கொண்டு சேர்ப்பது. சட்டம், நம் நன்மைக்கு தான் என்று தெரியாமல் இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போகிறோம்? அன்பார்ந்த தமிழ் இனமே விழித்து கொள்! உனக்காக அரசு உருவாக்கி உள்ள நல்ல திட்டங்களை பயன்படுத்து!

என்றும் வாழ்க வளர்க நிம்மதியுடன்!

No comments:

Post a Comment